Friday, January 19, 2007

யார் இவர்கள்?.....2

இதுதான் அன்பே உருவான மதமா?


ஒரு சிறு விதை காலத்தாலும், போஷாக்காலும் ஒரு ராட்சஷ மரமாக ஆவதை கண்டுள்ளீர்களா? அப்படிப்பட்ட மரம் மிக வலுவான, பிரம்மாண்டமான கட்டிடத்தின் அருகில் வளரும் பொழுது காலப்போக்கில் தன் வேர்களை ஆழமாகவும், பரவலாகவும் பரப்பி அந்த கட்டிடத்தின் அடிப்பகுதியையே சிதைத்து, அந்த கட்டிடத்தையே ஆட்டம் காண வைத்து விடும். கட்டிடத்தை காக்க அந்த மரத்தின் மேல் உள்ள கிளைகளை வெட்டி பயனில்லை. அதை வேருடன் சாய்க்க வேண்டியது அவசியம். அதன் ஆணி வேர் பிடுங்கப்பட்டே ஆகவேண்டும். இல்லையெனில் கட்டிடத்தை காக்க முடியாது. இஸ்லாம் என்னும் மரத்தின் வேர்கள் அதன் அடிப்படை வாதகொள்கைகள், அதன் ஆணிவேர் அதை நிறுவிய முகம்மது நபிகளே.


யூத மதம், கிருத்துவ மதம், இஸ்லாம் இவைகளின் விதை ஒன்று என்பதால் யூத மதம், கிருத்துவ மதம் இவற்றைப் பற்றிய சிறு வடிவத்தை உங்கள் முன் வைக்கிறேன். அப்போதுதான் இதன் அடிப்படை நோக்கமும், செயல் திட்டமும் ஒன்று என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும். முதலில் யூத மதத்தின் அடிப்படை சித்தாந்தங்கள் பற்றியும், அதன் விளைவுகளாக நாம் அனுபவித்தது பற்றியும் சில பார்வைகள் இங்கே.
யூதர்களின் ஒர் இறை கொள்கையை உடைய சமயம் யூத மதம். மோஸே என்பவர் மூலம் தோராவில் பதிவு செய்யப்பட்டுள்ள சட்டங்களை ஆதாரமாக கொண்டது. ஆபிரகாம் ஆதி மூதாதை ஆவார். கிருஸ்துவ பைபிளின் முதல் பாகமான பழைய ஏற்பாடு யூத மதத்தை மூலமாக கொண்டது. அது தனித்தன்மை கொண்ட இயற்கை வடிவத்தை (உருவத்தை), அதாவது மற்ற எல்லா நாகரீகங்களையும் அழிக்க வேன்டும் என்ற கட்டளையை உபதேசமாக மொழிகிறது. அதன் சில வரிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

விவிலியம்: யாத்திரா 23:24 - நீ அவர்களுடைய தேவர்களை பணிந்துகொள்ளாமலும், சேவியாமலும், அவர்கள் செய்கைகளின் படி செய்யாமலும், அவர்களை நிர்மூலம் பண்ணி, அவர்களுடைய சிலைகளை உடைத்துப்போடுவாயாக.விவிலியம்: யாத்திரா 34:13 - அவர்களுடைய பலி பீடங்களை இடித்து அவர்கள் சிலைகளை தகர்த்து அவர்கள் தோப்புகளை வெட்டிப்போடுங்கள்.

விவிலியம்:உபா. 12:13 - அவர்கள் பலி பீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளை தகர்த்து, அவர்கள் தோப்புகளை அக்னியால் சுட்டெரியுங்கள். அவர்களின் விக்ரகங்களை நொறுக்கி, அவைகளின் பெயரும் அவ்விடத்தில் இராமல் அழியும்படி செய்யக்கடவீர்களாக.
விவிலியம்:ஐஸாயா. 13:16- அவர்கள் குழந்தைகள், அவர்கள் கண் முன்பாகவே தரையில் மோதி அடித்து கொள்ளப்படட்டும். அவர்கள் வீடுகள் கொள்ளையிடப்படட்டும். அவர்கள் மனைவிகள் கற்பழித்து அவமானப்படுத்தப்படுவார்கள்.விவிலியம்: எண் 31:17,18- ஆகையால் குழந்தைகளில் எல்லா ஆண் பிள்ளைகளையும், திருமணமான எல்லா ஸ்திரீகளையும் கொன்று போடுங்கள். கல்யாணமாகாத கன்னிப்பெண்களை உங்களுக்காக உயிரோடு வையுங்கள்.
விவிலியம்:உபா. 20:16, 17 - உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு சுதந்திரமாக கொடுக்கிற........ ........ அவர்களை (சுவாசமுள்ள ஒன்றையும்) உயிரோடு வைக்காமல் உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு ஆணையிட்டபடியே சம்ஹாரம் பண்ணக் கடவாயாக.விவிலியம்:யாத்திரா. 34:14 - கர்த்தருடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது. அவர் எரிச்சலுள்ள தேவனே. ஆகையால் அந்நிய தேவனை நீ வணங்க வேண்டாம். இவ்வுலகில் வாழும் வரை இந்த சட்ட்ங்களை கடைபிடியுங்கள். ஒரு போதும் மறவாதீர்கள். இவற்றை சமய உணர்வோடு செயல்படுத்துங்கள்.


வாசகர்களே! இதன் சாரம் இதுதான். பிற கடவுளை வழிபடும் நாட்டினரை நீங்கள் பிடிக்கும் போது அவர்களை முற்றிலுமாக அழியுங்கள். அவர்களுடைய கடவுள்களை தூக்கி எறியுங்கள்.உடைத்துத் தள்ளுங்கள். அவைகளின் வழிபாட்டு முறை தொடர்புடைய அனைத்தையும் அழியுங்கள். அவர்களின் புனிதமான இடங்களை பெயரும், அதன் சுவடும் தெரியாமல் அழியுங்கள். அவர்கள் கண்முன்னே, அவர்கள் குழந்தைகளை கொல்லுங்கள். வீடுகளை அழியுங்கள். அவர்களுடைய மனைவியரை கற்பழித்து சித்ரவதை செய்து கொல்லுங்கள். எல்லா ஆண்களையும் அழியுங்கள். கன்னிப்பெண்களை உங்களுக்காக எடுத்து செல்லுங்கள். அவர்கள் மூலம் உங்களைப்போன்றே (அசுர) ஒரு சமுதாயத்தை உருவாக்குங்கள். சிசுக்களையும் வயோதிகர்களையும் விட்டு வைக்காதீர்கள். இந்த பூமியில் நீங்கள் வாழும் வரை இச்சட்டங்களை பின்பற்றுங்கள். இவற்றை ஒருபோதும் மறவாதீர்கள்.
கிருஸ்துவர்கள் தங்கள் கடவுளின் சட்டங்களை உற்சாகத்துடன் அனுசரித்தார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னரும் இச்சட்டங்க்ளை மறக்கவில்லை. இதன் காரணமாக நேரடியாக பாதிக்கபபட்டவர்கள் கோவா மற்றும் அத்ன் சுற்றிலும் உள்ள பிரதேசங்களில் இருந்த இந்துக்கள். இந்த கொடுமைகள் 200 ஆண்டுகளுக்கு இடைவிடாது நடந்தது. ( The Goa Inquisition)

இதன் பின்னணியில் இருந்த மூளை, இன்று புனிதர் என்று கிருஸ்துவர்களால் அழைக்கப்படும் ஒருவரே. அவர்தான் புனித பிரான்சிஸ் சேவியர்.


" குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர்களுக்கு முன்பாக சவுக்கடி தரப்பட்டு, படிப்படியாக அவர்களுடைய உடல் உறுப்புகள் அகற்றப்பட்டன. இந்த பெற்றோர்கள் இவையனைத்தையும் காண்பதை உறுதி செய்யும் விதமாக அவர்களின் கண்கள் மூட இயலாதவாறு கண் இமைகள் துண்டாக்கப்பட்டன. அவர்களுடைய கை, கால்கள் வெட்டப்பட்டு, துடிக்கவிடப்பட்டனர். மனைவிமார்களின் கண் முன்னே கணவனின் பிறப்புறுப்புக்கள் வெட்டப்பட்டு எரிக்கப்பட்டன. ஸ்திரிகளின் கொங்கைகள் திருகி அறுத்து எறியப்பட்டன. அவர்களின் பிறப்புறுப்பினுள்ளே வாள்களை நுழைத்து கிழித்தனர். அதை அவர்களுடைய கணவண்மார்கள் காணுமாறு பலவந்தப்படுத்தப்பட்டனர். கோவா மற்றும் அதன் சுற்றுப் பிரதேசங்களிலும், நன்ன்ம்பிக்கை முனையின் கிழக்கு பகுதி வரை 200 ஆண்டுகள் தொடர்ந்து இந்த கொடுமை நடந்து வந்தது."- பால் வில்லியம் ராபர்ட்ஸ் ( Empireof the soul -ஹார்ப்பர் காலின்ஸ் 1999 நூலிருந்து).
உண்மை வரலாறு இப்படி இருக்க, நாம் நமது குழந்தைகளுக்கு கூறுவது என்ன? எல்லா மதங்களும் சமம் என்ற பொய்யையே. ஒரு மதம் மற்ற மதத்தவரை அழிக்கக் கூறவில்லை, அன்பையே போதிக்கிறது என்று நாக்கூசாமல் பொய் சொல்லப்படுகிறது. ஒரே பொய்யை மீண்டும் மீண்டும் கூறி உண்மையாக்க முயற்சிக்கின்றனர். இதை இந்து பாமரனும், படித்தவனும் நம்புகிறான். இதற்கு காரணம் சமயத்தைப்பற்றிய அறியாமையே. அவர்கள் மதத்தை நீங்கள் பின்பற்ற தயாராக இல்லை என்றால், உங்கள் வீட்டுப்பெண்கள் கற்பழிக்கப்படுவார்கள். அதை பார்க்கத் தயாராகுங்கள்.

நமது இந்து தர்மம் நமக்கு இவ்வாறுதான் போதிக்கிறதா? இப்படிப்பட்ட காட்டுமிராண்டித்தனமான, சகிப்புத்தன்மை இல்லாத மதத்துடன், நம் புனிதமான இந்து மதத்தை ஒப்பிடுவதா? மிருகங்கள் கூட பசி இல்லாமல் தன் உணவை கொல்லுவதில்லை. ஆனால் இந்த அன்பே உருவான மனித மிருகங்கள் செய்தது இதை மட்டுமே.


என்ன அற்புதமான உபதேசங்கள்! மதம் மனிதனை இறைநிலைக்கு உயர்த்தவேன்டும் ஆனால் இங்கே அவனை மிருகமாக மாற்றுகிறது இது மதம் என கூற தகுதியுடையதுதானா? நமது இன்றைய கல்வி(மெக்காலே) முறையால் இது சீர்திருத்தமுடியாத அளவிற்கு நமது மனங்களில் வேரோடியிருக்கிறது. தவறு என தெரிந்தும் தட்டிக்கேட்க முடியாத அடிமைத்தனமான மனநிலையில் இருக்கிறோம்.


எங்கள் இந்து போதகர்களே! ஆசிரியர்களே! இங்கே உங்களுக்கு செய்தி கிடைக்கிறதா? நீங்கள் எங்களில் ஒருவரல்ல நிங்கள் அழிக்கப்படவேண்டியவர்கள் இந்த பூமியில் வாழ உங்களுக்கு உரிமையில்லை. இதுதான் அவர்கள் நமக்கு கூறும் மிக எளிமையான செய்தி. இப்படிப்பட்டவர்களுக்கு பெருந்தன்மை காட்டுவதாக நினைத்துக்கொண்டு உங்கள் சமுதாயத்தையே அழித்துக் கொள்ளப்போகிறீர்களா? இப்படிப்பட்ட ஒரு கடவுளை ஏற்றுக்கொள்ளத்தான் மதம் மாறினீர்களா? இதுதான் அன்பே உருவான மதமா? என இந்துவாக இருந்து மதம் மாறிச்சென்ற அறிவுள்ள ஆண்களையும், பெண்களையும் நான் கேட்க விரும்புகிறேன்.
யூதர்களும், கிருஸ்துவர்களும் இந்த பூமியில் வாழும் காலம் வரை விவிலியத்தை பரிசுத்த வேதாகமமாக (அது எவ்வளவு புனிதமற்றதாக இருப்பினும்) கருதுகிறார்கள். கோபம், பொறாமை, அழித்தல் ஆகியவற்றை இவர்களது மதம் ஆணையிடுவதன் மூலம் நிரந்தரமாக்குகிறது. இவற்றிக்கு நிரந்தர தன்மையை தருகிறது. காலங்கள் மாறலாம், சூழ்நிலைகள் மாறலாம் ஆனால் அவர்கள் செயல் திட்டம் மட்டும் மாறாது. இன்று வரை நாம் கண்டதும், கண்டுகொண்டிருப்பதும் இதுவே. சூழலுக்கேற்ப அவர்களது வெளித்தோற்றம் மட்டுமே மாறி வருகிறது. அதன் உள்நோக்கம மாறுவதில்லை. ஆனால் நாமோ அவர்கள் மாறி விட்டார்கள் பழையதை மறந்துவிடுவோம் என்கிறோம். நீங்கள் அப்படி கூற விரும்பினால் உங்களுக்கு அவர்கள் தர விரும்பும் பரிசு மரணத்தை தவிர வேறில்லை. வருங்காலத்தில் உங்கள் சந்ததிக்கு இருக்க ஒரு துளி இடமோ சுவாசிக்க காற்றோ கூட கிடைக்காது. எல்லாம் அவர்களுக்கே சொந்தம். இந்த பூமியில் வாழ அவர்களுக்கு மட்டுமே உரிமை உள்ளது. உங்களுக்கு இல்லை ஏனெனில் நீங்கள் வேற்று சமயத்தவர்.இப்படிப்பட்ட மதங்களின் உண்மையான முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட என்னுடன் பயணிக்கும் சக வாசகர்களுக்கு என்னுடைய நன்றிகள். வாருங்கள் என்னுடன். இவர்களது முகத்திரையை கிழித்து எறிவோம். உண்மையைக்காண பயம் வேண்டாம்.இன்று இல்லையேல் நாளை என்றாவது ஒரு நாள் உண்மையை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும். ஆம் ஏற்றுக்கொள்வோம். வருங்காலத்தில் இவர்களை எப்படி சமாளிப்பது, என்ன செய்வது என்பது நம் முயற்சியில் உள்ளது. நம் தர்மத்தை காக்க என்னோடு உங்கள் பயண்த்தை தொடருங்கள்...................

4 comments:

Anonymous said...

இந்து மத்துக்கு இஸ்லாமும், கிறித்துவமுமே முதல் /அ/ முக்கிய எதிரி என்று சொல்பவர்களுக்கு சில கேள்விகள்

நாம் சரித்திரத்தில் படிப்பது என்ன ? அவுரங்கசீப் இந்தியாவில் பல பாகங்களை ஆண்டான். பல ஊர்களில் கண்மூடித்தனமாய் மதமாற்றம் செய்தான். அல்லவா ?

நான் சரித்திரத்தை குறை கூறவில்லை. ஒப்புகிறேன். எனினும் இஸ்லாமே இந்துக்களுக்கு முதல் எதிரி, எனும் வாதத்தை மறுக்கிறேன் ஆகவே இந்த கேள்விகள்

1. அவுரங்கசீப் காலத்தில் நடந்த பலாத்கார மத மாற்றத்தை விட இன்று இந்தியாவில் அதிக மதமாற்றம் நடந்துவிடவில்லை... நடக்கவும் இயலாது

அவுரங்கசீப் வாழ்ந்து சுமார் 300 வருடங்களுக்கு பின்னும் .. சமீபத்திய காலம் வரை, இந்தியாவில், இந்து மதம் பெரும்பான்மை மதமாக இருந்தது ... அது எப்படி

அவ்ரங்கசீப் (மாலிக்காபூர்.. சரித்திரத்தில் இடம் பெற்ற ..பெறாத இன்ன பிற இஸ்லாமிய மன்னர்கள் ) காலத்தில் பிழைத்த இந்து மதம் எப்படி (எதனால்) பிழைத்தது ??

அன்று பிழைத்த இந்து மத்துக்கு .. இன்று சுதத்திர இந்தியாவில், இஸ்லாம் [அல்லது கிறித்துவம்] அப்படி என்ன ஊறு விளைவிக்க முடியும் ?

2. இன்று இருப்பதை காட்டிலும், வெள்ளையர் ஆட்சியில், கிறித்துவத்துக்கு, செல்வாக்கும் சலுகையும் அதிகம். எனினும் வெள்ளையரின் முழு ஆட்சியை இந்து மதம் எப்படி தாங்கியது ?

இந்த 200 ~ 250 ஆண்டுகளிக் ஏன் இந்தியர் எல்லோரும் கிறித்துவர் ஆகிவிடவில்லை ? அல்லது இந்து மதம் ஏன் அழிந்துவிடவில்லை ?

கிறித்தவர் ஆண்டபின்னும் 1950களில் இந்துக்கள் எப்படி 80%க்கும் மேல் சதவிகிதம் இருந்தனர் ?

3. கடந்த 10 ஆண்டுகளில், தமிழ் நாட்டில் எத்துனை தமிழ் இந்துக்கள் இன்னபிற மத்ததவரால் கொல்லப் படடு அல்லது தாக்கப் பட்டு இருக்கிறார்கள். இத்தகைய கேஸ்கள் எத்துனை கேஸ்கள் கோர்ட்டில் இருக்கின்றன ?

அதேசமையம் எத்துனை விவாகறத்து [இந்து ஆண் vs இந்து பெண்] கேஸ்கள் கோர்ட்டில் நடக்கின்றன ? கோர்ட்டில் தங்கிஇருக்கின்றன ?

யாருமே மத வெறியால் தாக்கப்பட / கொல்லப்படவில்லை என்று வாதிக்க வரவில்லை. இரண்டு பட்டியல்களையும் [இஸ்லாம் Vs இந்து, மற்றும் இந்து Vs இந்து, ஆகிய இரண்டு பட்டியல்களையும்] இடுங்கள் என்றே கூறுகிறேன்

இஸ்லாம் 1000 வருடம் முன்பு இங்கே வந்தது ... 100 வருடம் முன்பு இதை செய்தது, துருக்கியல் இது நடந்தது, 20 வருடம் முன்பு கிறித்துவம் அதை செய்தது என்று சொல்லி சொல்லி சாகும் வேளையில், நம் வீட்டில், அதாவது இந்துக்களில் வீட்டில், நித்தம் நித்தம் என்ன நடக்கிறது என்று சற்றே சிந்திக்கவும்

இன்று இந்து குழந்தைகளை விட இந்து முதியோரே அனாதைகளாய் நிற்கின்றனர்

- முதியோர் இல்லங்கள் நிறம்பி வழிகின்றன

- மருமகள் விரட்டிவிட்டாள் என்று தெருவில் நிற்போர் ...

- அனாதைகளான அருமை பெற்றோர்,

- அனாதைகளாய் போன நேற்றைய இந்தியா....

இவர்களில் இந்துக்களே அதிகம்
Family courtக்கு ஒரு முறை விஜயம் செய்யுங்கள். இந்து கேஸ்கள் அத்துனை, முஸ்லீம் கேஸ்கள் எத்துனை என்று தெரியும்...

சிந்திப்பீர்...செயல் படுவீர்

நான் எந்த மதத்துக்கும் சப்பை கட்டு கட்ட வரவில்லை. எனக்கு தென்படும் உண்மை நிலையை எழுதுகிறேன்

நான் ஒரு இந்து, அதனால் தான் இதை எழுதுகிறேன்

ஞாயமான, ஆபாசமற்ற வாத்தை எதிர் நோக்கி நிற்கிறேன்

நண்பன்
விநாயக்

Anonymous said...

well said by vinayak.....pls dont look the another religion....just look your people and solve the neccessary problems.....its totally unneccessary.......

Anonymous said...

வினாயக் என்ற பேர் வைத்தாலும் நீர் ஒரு வேற்று மத்தத்தவனே. சரி விஷயத்துக்கு வருவோம். வாக்கீசர் இந்த பதிவில் சொன்னது எதையும் பொய் என்று நிரூபிக்க முடியாத கையாலாகாத் தனம் உடனே பிதற்ற தொடங்கியது போல தெரிகிறது. முதலில் ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். இது இந்து மதம் உருவாகிய தேசம், இங்கு பிற சமயங்கள் எத்துணை முயன்றாலும் செழிக்க முடியாது. மற்றது, தளர்வடையும் போதெல்லாம் ஹிந்து மதம் தனது சாதுக்கள், மகான்கள் மூலம் தற்காத்து கொள்ளக் கூடியது. அது என்றோ மறைந்து விட்ட மோசஸையோ, ஜீசஸையோ, மொஹமதுவையோ நம்பி இருப்பதில்லை. கோர்ட்டுக்கு வரும் ஹிந்துக்களின் விவாகரத்து எண்ணிக்கையை உதாரணம் காட்டியுள்ளீர்கள். இந்துக்கள் பெரும்பான்மையாக தான் என்றும் உள்ளார்கள் என்று வேறு சொல்லி விட்டீர்கள். எங்கே ஐயா படித்தீர்?
மீண்டும் உங்கள் நகைச்சுவை பேச்சு கேட்க ஆவலாய் உள்ளேன்.

Anonymous said...

hello....jesus loves you all... the jesus only meet your comments... this all stories are part of the bible.... in bible so many words are there... your seeing only the negative things.... please see bible with postive eyes also ... please dont write rubbish...