Saturday, January 20, 2007

யார் இவர்கள்?.....3

ஏசு வந்தது வரமா? அல்லது மனிதகுலத்திற்கு சாபமா?


யூதமதத்தின் விதை கிருஸ்துவ சமயத்தில் எப்படி? பல புதியபரிமாணங்களை சேர்த்துக் கொண்டு, மேலும் ஆழ்த்தை நோக்கி, அதே சமயம் தன் பழைய முகசுருக்கங்களை நீக்கி, இளமையான தோற்றம் தரும் புதிய திடமான செயல்பாடுகளின் துனண்யோடு ஒரு மனித முகத்தை தருகிறது கிருஸ்துவ மதம்.
புதிய ஏற்பாடு - கிருஸ்துவ விவிலியத்தின் இரண்டாம் பாகம். இந்தபுதிய ஏற்பாட்டில் காணப்படும் கிருஸ்துவின் போதனைகள் புதிய சுவிசேஷம் எனப்படும். முதல் சுவிசேஷத்தை எழுதிய திருத்தூதர் புனித மேத்யூ. மூன்றாம் சுவிசேஷத்தை எழுதிய சமயதிருப்பணியாளர் (?) புனித லூக். தாமஸ் சுவிசேஷம் ஏசுவின் ரகசிய கூற்றுக்கள் அடங்கியது. இது புனித தாமஸால் பதிவு செய்யப்பட்டது. (The myth of St. Thomas)இதன் மூல வடிவம் பண்டைய எகிப்திய மொழியாகிய காப்டிய மொழியில் உள்ளது. இது 1946-ல் தான் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் கிருஸ்துவ விவிலியத்தொகுப்பில் இதை இணைக்க முடியாமல் போயிருக்கலாம்
.

" உலகளாவிய சகோதரத்துவம் பற்றி கிருஸ்துவர்கள் பேசுகிறார்கள் ஆனால் கிருஸ்துவன் அல்லாத ஒருவன் நரகத்திற்குத்தான் செல்லவேண்டும். மிருகங்களை போல் அங்கு நிரந்தரமாக வருக்கப்படவேண்டும். இதுவே கிருஸ்துவர்களின் மனநிலை"- சுவாமி விவேகானந்தர்.

தன்னோடு ஒத்துப்போகாதவர்களுக்கு மீளமுடியா நரகம் என்று ஒன்று உண்டு. அவர்கள் அங்கு தான் செல்ல வேண்டும் என வெறுக்கத்தக்க துவேசத்தை விதைத்த முதல் சமய போதகர் ஏசுதான். பரந்த சமய உலகிற்கு இவர் அளித்த முதல் கருத்தும், மூலக்கருத்தும் இதுவே. 2000 ஆண்டுகளில் இது பல்வேறு நாட்டு மக்களையும், அவர்களது கலாச்சாரங்களையும் முழுமையாக அழித்து விட்டது. (The myth of St.Thomas - Eswar Saran)

பூமியில் அமைதியை கொண்டு வந்தேன் என்று நினைக்கிறாயா? இல்லை என்று சொல்கிறேன். மனித இனத்திற்குள் பிரிவினையை ஏற்படுத்தவே வந்துள்ளேன். உலகில் சமாதானத்தை கொண்டு வர நான் வந்து இருப்பதாக நினைக்க வேண்டாம். நான் சமாதானத்தை கொண்டுவருவதற்காக அல்லாமல் போருக்கான வாளையே கொண்டுவந்தேன் என்கிறார் ஏசு. குடும்பங்களை பிரிக்க, தந்தையும் மகனும், தாயும் மகளும், மருமகளும் மாமியாரும் என ஒருவருக்கொருவரை எதிராளிகளாக்க, பெற்றோரும் பிள்ளைகளும், சகோதர சகோதரிகளும், ஒருவரை ஒருவர் வெறுக்குமாறு செய்யவே வந்துள்ளேன். குடும்பங்களை கந்தல்களாக கிழிக்க, அவற்றை துண்டு துண்டுகளாக பிரிக்க, குடும்பம் என்ற அமைப்பை எப்போதும் அழியச் செய்யவே நான் வந்துள்ளேன். ஓரு மனிதன் தன் வாழ்க்கையை வெறுக்குமாறு செய்ய விரும்புகிறேன். எங்கும் எதிலும் வெறுப்பு, வன்மம் தவிர வேறெதுவும் இருக்ககூடாது. இவை அனைத்தும் ஏசுபிரான் உதிர்த்த முத்துக்கள். இதை அவரது சீடர்களும் மூன்று சுவிசேஷங்களில் உறுதி செய்துள்ளனர்.

உண்மை இப்படி இருக்க ஏசுவின் உருவத்தை அன்பும் அமைதியும் தவழ்வது போல் ஏன் அவர்கள் விளம்பரப்படுத்துகிறார்கள்? இந்த அன்பு உருவத்தின் மூலம் சந்தையில் அவர்கள் கிருஸ்துவ மதம் எனும் பொருளை விற்கப்பார்க்கிறார்கள். அதற்கான வெளி வேஷமே இது. இந்த போலியான முகத்தை காட்டும் சில வாக்கியங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.
விவிலியம் மாத்யூ 10:34- பூமியின் மேல் சமாதானத்தை அனுப்ப வந்தேன் என எண்ணாதீர்கள். சமாதானத்தை அல்ல, பட்டயத்தையே அனுப்ப வந்தேன்.
விவிலியம்லூக் 12:51 - நான் பூமியில் சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என நினைக்கிறீர்களா? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்கு சொல்கிறேன்.
தாம்ஸ் சுவிசேஷம் 16 - ஏசு சொன்னார்: உலகில் சமாதானத்தை உண்டாக்க நான் வந்தேன் என்று அநேகமான மனிதர்கள் எண்ணுகிறார்கள். பூமியில் பிரிவினையை, தீயை, பட்டயத்தை, போரை உண்டாக்கவே நான் வந்ததை அவர்கள் அறியவில்லை. குடும்பத்தில் உள்ள ஐந்து பேரையும் ஒருவருக்கொருவர் எதிராளியாக மாற்றுவேன் அவர்கள் தனித்தனி ஆட்களாகிவிடுவார்கள்.
விவிலியம் மாத்யூ 10:35,36 -எப்படி எனில் மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமியாருக்கும் பிரிவினை உண்டாக்கவே வந்தேன். ஒருமனிதனுக்கு எதிரிகள் அவன் வீட்டாரே. இதையே புனித லூக் விவிலியம் லூக் 12:52,53ல் உறுதி செய்கிறார்.
தாமஸ் சுவிசேஷம் 56 - ஏசு சொன்னார்: தன் தகப்பனையும், தாயையும் வெறுக்காதவன் என் சீடனாக இருக்க முடியாது. தன் சகோதரர்களையும், சகோதரிகளையும் வெறுக்காதவன், என்னைப்போல் தன் சிலுவையை சுமக்காதவன் எனக்கு உண்மையானவனாக இருக்க மாட்டான். இதையும் புனித லூக் விவிலியம் லூக் 14:26ல் உறுதி செய்கிறார்.

இவை எல்லாம் உண்மையாக இருக்க முடியுமா? இதில் ஏதேனும் திரித்து கூறப்பட்டிருக்குமா? என்று உங்களுக்கு சந்தேகம் வரலாம். பகுத்தறிவுள்ள சுயமாக சிந்திக்க்கூடிய ஒவ்வொரு மனிதனுக்கும் வர வேண்டிய சந்தேகம்தான் இது. விவிலியத்தை ஒருமுறை முழுமையாக படித்துப் பார்த்தால் உங்களது சந்தேகம் நீங்கும். அப்போது என் கருத்தை நீங்கள் இன்னும் அழுத்தமாக உறுதி செய்வீர்கள். ஆனால் எத்தனை பேர் விவிலியத்தை படித்துள்ளனர் என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். மதம் மாறிய நமது சகோதரர்களிடம் இதனை கேட்டுப்பாருங்கள்.செம்மறி ஆட்டு கூட்டங்களை போல் நல்ல மேய்ப்பர் என்று நம்பி ஒன்றன் பின் ஒன்றாகப்போய் சேர்ந்தவர்கள் அவர்கள். அவர்க்களுக்கு எதுவும் தெரியாது. இப்படி எல்லாம் இருக்குமா? என்று உங்களிடமே அப்பாவித்தனமாக கேட்பார்கள். விவிலியத்தை கையில் மட்டுமே வைக்க பழக்கப்பட்டவர்கள். அதன் உள்ளிருக்கும் விஷத்தை அறியாதவர்கள்.
பிற கிருஸ்துவர்களுக்கு பயிற்சி அளிப்போர் இந்த போதனைகளை கொண்டே வாழ்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா? புனிதர்கள், போப், தலைமை ஆயர்கள், பேராயர்கள், ஆயர்கள் என்ற பதவிகளில் இருந்தவர்களும், இருப்பவர்களும் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தவர்கள் என்பதை அவர்களது உண்மையான வரலாற்றை புரட்டிப் பார்த்தால் தெரியும்.
ஏசு அன்பை போதிக்க வந்தாரா? வன்மத்தை பரப்ப வந்தாரா? என்பதை கிருஸ்துவ மதம் 2000 ஆண்டுகளில் கடந்து வந்த பாதையை ஒரு பார்வை பார்த்தாலே தெரியும். விவிலியத்தில் கூறப்பட்ட ஏசுவும், உண்மையான ஏசுவும் வேறுவேறானவர்கள் என புதுக்கதை பரப்பப்படுகிறது. உலகின் பார்வையில், அவர்கள் ஒருவரா அல்லது இருவரா என்பதைப்பற்றி கவலையில்லை. கிருஸ்துவ விவிலியத்தின் ஏசுவை உலகம் நம்புகிறது. இங்கு உலகம் நம்புவதுதான் முக்கியம். காரணம் நம்புகிற தன்மை ந்ம்புவோரின் நிஜவாழக்கையை வடிவமைக்கிறது. அவர்களின் செயல் பாடுகளை தீர்மானிக்கிறது. கடந்த 2000 ஆண்டுகளில் மதத்தின் பெயரால் உலகில் சிந்திய ரத்தம் அதிகம். அது உண்மையாகவே மதத்திற்காகவா என்றால் இல்லை. மதத்தின் பெயரால் தன் சொந்த நலத்திற்காக, உலக இன்பங்களை அனுபவிப்பதற்காகத்தான். எல்லாம் தனக்கே கிடைக்க வேண்டும் என்ற வெறி பிடித்த பேராசைக்காரர்களால்தான் இந்த உலகம் கடந்த 2000 ஆண்டுகளாக ரத்தத்தில் மிதக்கிறது.
சில காலங்களில் கிருஸ்துவர்கள், சில காலங்களில் யூதர்கள், சில காலங்களில் முஸ்லீம்கள் என போட்டி போட்டுக்கொண்டு இந்த உலகை ரத்தக்காடாக மாற்றிக் காட்டியவர்கள் இவர்கள். சிலுவைப்போர்கள், ஜிகாத்துக்கள், புனிதப்போர்கள் என இவர்கள் தொடர்பான ரத்தம் தோய்ந்த வரலாற்றை புரட்டிப்பாருங்கள். ரத்தத்தை உறைய வைக்கும் உண்மை சம்பவங்களை அதில் காண்பீர்கள். பல ஆண்டுகளாக பெய்ரூட்டில் நடந்தது என்ன? பாலஸ்தீனத்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையே நடப்பது என்ன?
ஏசுவின் கனவு நனவாயிற்று. உண்மையில் இன்று எங்கும் ச்ண்டை சச்சரவுகளை காண்கிறோம். எங்கும் சிதறிவிட்ட குடும்பங்களை காண்கிறோம் இந்த பூமிக்கு ஏசு வந்ததிலிருந்து 2000 வருடங்களில் உலகிற்கு நேர்ந்தது என்ன? விளம்பரப்படுத்துவது போல் ஏசு வந்தது வரமா? அல்லது மனிதகுலத்திற்கு சாபமா? விடையை தேடவேண்டியது நீங்கள்தான். நான் ஒரு வழிகாட்டி மட்டுமே....

2 comments:

Jegadeesh said...

I love this Website i like ur words..this website is genious website ,..

JOCKEY Jacky said...

குடும்பம் அழிக்க பட வேண்ட்டிய விஷம்
அதனால் தன இன்ன ந்த உலகம் விஷம் ஆகியது
அகவே ஏசுவின் கனவு நனவாவதில் எந்த தவறும் இல்லை
குடும்ப விஷம் அழிக