இந்த கட்டுரையை ''The New Indian Express''ல் எழுதியவர் திருமதி. மேனகா காந்தி. அதன் தமிழ் வடிவம் இது.
தோல்மற்றும் இறைச்சி ஏற்றுமதியில் இந்தியா, உலகில் பெரும்பங்கு வகிக்கிறது என்பது உண்மை. இவை எங்கிருந்து வருகிறது, எப்படி ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதை அறிந்து கொண்டால் நாம் இதைப்பற்றி பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது.
சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் கால்நடை வெட்டும் கூடங்களைப் பற்றிய 200க்கும் மேற்பட்ட புகார்கள் என்னிடம் உள்ளது. இதில் அதிகப்படியான புகார்கள், பசுக்கள் மற்றும் கன்றுகளை அடைத்துச் சென்ற லாரிகளைத் தடுத்து நிறுத்தியவர்களிடமிருந்து வந்தவை. இப்படி லாரிகளில் அடைத்துச் செல்லப்பட்ட கால்நடைகளில் மிகுதியானவை காயங்களினாலும், மூச்சுவிட முடியாத நிலையினாலும் இறந்து விடுகின்றன. இவ்வாறு கைப்பற்றப்பட்ட கால்நடைகளை காவல்துறையினர் லஞ்சம் பெற்றுக் கொண்டு விட்டுவிடுகின்றனர்.
முலாயம்சிங் அரசு நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடை வெட்டும் கூடங்களுக்கு, இறைச்சி ஏற்றுமதிக்கான லைசென்சு வழங்கியுள்ளதால் உத்திரப்பிரதேசம் இந்தியாவின் மிகப்பெரிய கால்நடை வெட்டும் களமாக மாறியுள்ளது. மகாராஷ்டிரா முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பசுக்கள் டியோனார் கொண்டு செல்லப்பட்டு சட்டத்துக்குப் புறம்பாக வெட்டப்படுகிறது.
ஒரு பசுவோ அல்லது எருமையோ இல்லாத பங்களாதேசம், வருடத்திற்கு 1 லட்சம் டன் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்கிறது. எப்படி? ஒரிஸ்ஸா மற்றும் பீகாரிலிருந்து கடத்தப்பட்டு மேற்கு வங்காளம் கொண்டு செல்லப்படும் பசுக்கள், அங்கிருந்து பங்களாதேசத்திற்கு அனுப்பப்படுவதால் ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டிலிருந்து கொண்டு செல்லப்படும் பசுக்கள் கேரள எல்லையில் அமைந்துள்ள டஜனுக்கும் மேற்பட்ட வெட்டுக் கூடங்களில் கொல்லப்பட்டு, அதன் இறைச்சியானது மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. பஞ்சாபிலிருந்து போலிச் சான்றிதழ்கள் காட்டியும், ரயில்வே துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தும் ரயில் பெட்டிகளில் அடைத்து கால்நடைகள் மேற்கு வங்கத்திற்குக் கடத்தப்படுகின்றன.
அரியானா மாநிலத்திலிருந்து கடத்தப்படும் பசுக்கள் டில்லியில் செயல்படும் அங்கீகாரம் பெறாத 11,000க்கும் மேற்பட்ட வெட்டுக் கூடங்களாகிய சேரிகளில் செயல்படும் சிறிய இறைச்சிக் கூடங்களில் வெட்டப்படுகிறது. ஒரு நாளைக்கு சுமார் இரண்டு லட்சம் பசுக்கள் கொல்லப்படும் கொடூரம், இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. சட்டம் கூறுவது என்னவெனில் ஒரு டிரக்கில் நான்கு பசுக்கள் மட்டுமே ஏற்றிச் செல்லப்பட வேண்டும். ஆனால் நடைபெறுவது என்னவெனில் எனது இயக்கத்தை சேர்ந்தவர்கள் பிடிக்கும் லாரிகளில் எல்லாம் 50-க்கும் மேற்பட்ட பசுக்கள் ஏற்றப்பட்டு இருந்தது. காரணம் என்னவெனில் இதற்காக போலீசார் லஞ்சம் பெற்றுக் கொள்கின்றனர். நீதிபதிகளும் லஞ்சம் பெற்றுக் கொண்டு போலிச் சான்றிதழ்களை தினசரி வழங்குகின்றனர்.
சட்டத்திற்குப்புறம்பாக வெட்டப்படும் கால்நடைகளைப் பயன்படுத்தியே தோல் தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. ஏற்றுமதி செய்யப்படும் இறைச்சியும், இளவயது பசுக்கள் மற்றும் அவற்றின் கன்றுகளை வெட்டியே அனுப்பப்படுகின்றன. இந்த உண்மையை புறக்கணிக்கும் இந்திய அரசு, உலகின் மிகப்பெரிய தோல் மற்றும் இறைச்சி ஏற்றுமதியாளர் இந்தியாதான் என்று மார்தட்டிக் கொள்கிறது. நடைபெறும் இந்தக் கொடூர குற்றத்தினால் போலீசார் மிகுந்த சந்தோஷத்துடன் இருக்கின்றனர். கால்நடைகள் ஏற்றிச் செல்லும் ஒவ்வொரு டிரக்கும் அவர்களுக்கு லஞ்சம் கொடுக்கின்றன. ஒவ்வொரு போலீசாரும் தினமும் ஆயிரக்கணக்கில் லஞ்சப் பணத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்கின்றனர்.
இந்தநிலை நீடித்தால் இன்னும் பத்து வருடத்தில் இந்தியாவில் ஒரு கால்நடைகூட மீதம் இருக்காது . ஆனால் அரசாங்கம் 1 கோடிக்கும் மேற்பட்ட கால்நடைகள் இந்தியாவில் இருக்கின்றன என்று புள்ளி விவரத்தைக் காட்டி பெருமைப்பட்டுக் கொள்கிறது. எண்ணிப் பார்த்தால் உண்மையில் இருப்பது 20 லட்சத்துக்கும் குறைவானதே. கிராமப்புறத்தில் வசிக்கும் யாரைக் கேட்டாலும் இதை உறுதிப்படுத்துவர். பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் ஒரு பசுவை கூட பார்க்க முடியாது. பீகாரில் சென்று பாருங்கள் , நிறைய கிராமங்களில் ஒரு பசு கூட இல்லாத நிலையே உள்ளது.
அரசாங்ககோசாலைகளில் இருக்கும் பசுக்களின் நிலையும் மோசமே. கோசாலை நிர்வாகிகள் அரசு இலவசமாக வழங்கிய நிலத்தை தங்களது பால் பண்ணையாக மாற்றிக் கொண்டுள்ளனர். ஆக்ராவில் இருக்கும் பால்கேஷ்வரர் கோசாலை , இறைச்சி வெட்டுக் கூடத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன்மூலம் பால்தராத பசுக்கள் மாதாமாதம் வெட்டுக் கூடங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
கிருஷ்ணர்பிறந்த மதுராவில், பசுக்களின் இருப்பிடமான மதுராவில் ஒரு கன்றுக்குட்டியைக் கூட பார்க்க முடியாது. அவற்றை விற்று விடுகின்றனர் . ஏனெனில் நிர்வாகிகள் பசுவின் பால் தங்களுக்குத்தானே தவிர கன்றுக்கு அல்ல என நினைக்கின்றனர். உத்திரப்பிரதேச கால்நடை பராமரிப்புத் துறையால் லக்னோ நகரிலிருந்து அப்புறப்படுத்தி லக்கிம்பூர் கேரிக்கு அனுப்பப்படும் பசுக்கள் வழியிலேயே இறைச்சி கூடங்களுக்கு லாரி டிரைவர்களால் திருட்டுத்தனமாக விற்கப்படுகின்றன. கோசாலைக்கு வந்து சேரும் பசுக்களும் மாவட்ட மாஜிஸ்டிரேட்டின் கண்காணிக்கும் கண்களுக்கு எதிரிலேயே இறைச்சி விற்பனையாளர்களால் உடனடியாக எடுத்துச் செல்லப்படுகின்றன.
ராஜஸ்தான்சிரோஜியில் உள்ள மாவட்ட மாஜிஸ்டிரேட் தினமும் இறைச்சி விற்பனையாளர்களுக்கு போலிச் சான்றிதழ் வழங்குகிறார். பசு பாதுகாப்பு இயக்கத்தினர் யாராவது இந்த மாதிரி போலிச் சான்றிதழ்கள் மூலம் அனுப்பப்படும் லாரிகளைப் பிடித்தால் அவர்களை போலீசார் அடித்து விரட்டுகின்றனர்.
மும்பையில் இருக்கும் முஸ்லிம்கள் கர்ப்பிணியான பசுக்களையும், பால் கறக்கும் பசுக்களையும் மட்டுமே சாப்பிட விரும்புகின்றனர் . 10-நிமிடத்திற்கு முன்னால் பால் கறந்த பசுவின் தலை வெட்டப்பட்ட போட்டோ சான்றுகள் என்னிடம் உள்ளன. பால் கறக்கும் பசுவின் இறைச்சியைத்தான் விற்பனை செய்கிறோம் என்ற அடையாளத்திற்கு, அவற்றின் மடிக்காம்புகளும் (udders) இறைச்சியுடன் விற்கப்படுகின்றது.
மக்கள், இறைச்சி மற்றும் தோல் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் அந்நியச் செலவாணியை/பணத்தை கருத்தில் கொண்டு இதை நியாயப்படுத்தினால் அவர்கள் பொருளாதாரத்திற்கு இந்த உபயோகமற்ற பசுக்களால் கிடைக்கும் நன்மைகளையும் கணக்கிட்டுப் பார்க்கவேண்டும்.
ஐந்துவருடங்களுக்குமுன் Central Institute of Agriculture Engineering எடுத்தளித்த ஒரு ஆய்வு அறிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 73 மில்லியன் (1990)ல் வற்றிய கால்நடைகள் - 27 மில்லியன் மெகாவாட் எரிசக்திக்கு சமமாக வேலை செய்கின்றன. அப்படி எனில் எரிசக்தி மூலப்பொருட்களான நிலக்கரி போன்றவை சேமிக்கப்படுவது மட்டுமின்றி , அவற்றின் உபயோகத்தினால் ஏற்படும் புகை மற்றும் மாசு இவைகளால் சுற்றுச்சூழல் மாசுபடுவதும் தடுக்கப்படுகிறது .
இந்த கால்நடைகள் 5,000 கோடிக்குச் சமமான 100 மில்லியன் டன்கள் உலர்ந்த சாணத்தை அளிக்கின்றன. இவற்றால் 50 மில்லியன் டன் விறகுகள் சேமிக்கப்படுகின்றன . இதன் விளைவாக மரங்கள் வெட்டப்படுவது தடுக்கப்படுகின்றது. சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகின்றது . இந்த 73 மில்லியன் கால்நடைகளை மாற்றுவதற்கு நமக்கு 7.3 மில்லியன் டிராக்டர்கள் வேண்டும். ஒரு டிராக்டர் இரண்டரை லட்சம் எனில் தேவைப்படும் முதலீடு 1,80,000 கோடி. இதுதவிர 2,37,50,000 டன்கள் எரிபொருள் இவற்றின் இயக்கத்திற்கு தேவைப்படுகிறது. இதன் மதிப்பு 57,000 கோடி. இந்த கால்நடைகளுக்கு நாம் கடன்பட்டுள்ள தொகை இவ்வளவு இருக்க, இவற்றை நாம் அழித்துவிட்டால் அது நமக்கு பெரிய இழப்பாகும்.
கால்நடைகள்அழிந்தால் நமக்கு எரிசக்தி தரும் சாணம் மற்றும் உரங்கள் கிடைக்ாது. இதன் விளைவால் எரிவாயு இழப்பு ஏற்படுகிறது . எரிபொருளுக்காக மரங்கள் வெட்டப்படுகின்றன. 1994- ல் நாம் முதன் முறையாக ஹாலந்து நாட்டிலிருந்து எருவை இறக்குமதி செய்யும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டோம். ரசாயன உர இறக்குமதி 1960-ல் 1 கோடியாக இருந்தது . ஆனால் 1990-ல் 450 கோடியாக வளர்ந்து 2005-ல் இது மும்மடங்கு உயர்ந்தது. மற்ற கால்நடை உற்பத்திப் பொருள்களின் இறக்குமதியை பற்றிப் பார்ப்போம்.
பால்மற்றும் பால் பவுடர் இறக்குமதி 1950ம் ஆண்டு 6டன்னாக இருந்து 1990-ம் ஆண்டு 65-டன்னாக அதிகரித்தது. பட்டர் ஆயில் அரை டன்னாக இருந்தது 16½ டன்னாக உயர்ந்து 2006-ம் ஆண்டில் மும்மடங்கு அதிகரித்துள்ளது. மத்திய ரகமுள்ள ஒரு வெட்டுக் கூடத்தை சுத்தப்படுத்துவதற்கு தினமும் 16 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இது 30 லட்சம் மக்களின் தாகத்தை தீர்க்கக் கூடியது .

தண்ணீர் மற்றும் எரிசக்தி பற்றாக்குறையால் தவிக்கும் இந்தியா போன்ற நாடு, மேற்சொன்ன கால்நடை ஒழிப்பை இனிமேலும் தாக்குப்பிடிக்குமா?